கோவை தெற்கு, ராமநாதபுரம்03 Jun 2026

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம்,பெரியார் நகரில் பகுதிகளில் மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியின் பெரியார் நகரில், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.


கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தமக்கு ஆதரவு அளித்து, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களின் அன்பும் நம்பிக்கையும் தமக்கு மேலும் பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் முன்னுரிமையுடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


பெரியார் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தங்களது பகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம்,பெரியார் நகரில் பகுதிகளில் மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். | V Senthil Balaji Fans Club