கோவை தெற்கு, கொண்டசாமி லே-அவுட்03 Jun 2026

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டசாமி லே-அவுட் பகுதிகளில் மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நன்றி தெரிவிக்கும் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று கொண்டசாமி லே-அவுட் பகுதியில் மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மக்களின் அன்பான வரவேற்பைப் பெற்ற அவர், தேர்தலில் வழங்கிய ஆதரவிற்கும், தொடர்ந்து கழகத்தின் மீதான நம்பிக்கைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


மேலும்,கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொண்டசாமி லே-அவுட் பகுதி முழுவதும் உற்சாகமான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் பயணம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டசாமி லே-அவுட் பகுதிகளில் மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். | V Senthil Balaji Fans Club