வேலுச்சாமிபுரம், கரூர்20 Apr 2026

கரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆசி. எம். தியாகராஜன் அவர்களை ஆதரித்து, வேலுச்சாமிபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு, மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கரூர் மாவட்டம், கரூர் அருகிலுள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி மற்றும் மாணவர் நலன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் இந்த பரப்புரை நடைபெற்றது.


இந்த நிகழ்வில்,மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு, கரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. ஆசி. எம். தியாகராஜன் அவர்களுக்கு ஆதரவு திரட்டினார். பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், கல்வி, பெண்கள் நலன், சமூக பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் கடந்த கால சாதனைகளையும், எதிர்கால திட்டங்களையும் எடுத்துரைத்தார்.


மேலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வெற்றி சின்னமான “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி, பொதுமக்களிடம் ஆதரவை கோரினார்.


இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, தேர்தல் பரப்புரைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

கரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆசி. எம். தியாகராஜன் அவர்களை ஆதரித்து, வேலுச்சாமிபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு, மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் | V Senthil Balaji Fans Club