கரூர் மாவட்டம், கரூர் அரசு காலனி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள், கரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. ஆசி.எம். தியாகராஜன் அவர்களை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்படி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாக உயர்த்தப்படுவதுடன், காப்பீட்டுத் தொகையும் ரூ.10 இலட்சமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பை உருவாக்கும் என்றும், குடும்பங்களின் மருத்துவச் செலவுச் சுமையை குறைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் சக்தியாக உள்ள உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு உற்சாகம் அளித்தனர்.