மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில்,மாண்புமிகு V. செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
அப்போது அப்பகுதி மக்களிடம் உரையாற்றிய மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள், தேர்தலில் அளித்த மகத்தான ஆதரவுக்கும், கழகத்தின் மீதும் தம்மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு, தொகுதியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பலர் தங்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக எடுத்துரைத்தனர். அவற்றை கவனமாக கேட்டறிந்த மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.