கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள், கரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.ஆசி.எம்.தியாகராஜன் அவர்களை ஆதரித்து, பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் உரையாற்றிய போது, மாணவர்களின் கல்வி முன்னேற்றமே தமிழகத்தின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதையும், பொருளாதார தடைகளை நீக்கி, உயர்கல்வியை அனைவருக்கும் எளிதில் அடையக்கூடியதாக மாற்றுவதே இந்த திட்ட உயர்வின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களித்து, சமூகநீதியும், கல்வி வளர்ச்சியும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் உற்சாகமாக கலந்து கொண்டு, பிரச்சாரத்தை வெற்றிகரமாக மாற்றினர்.