மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிக்காக வாக்களித்து ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று ஒலம்பஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
ஒலம்பஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பயணத்தின்போது, பொதுமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தலில் திமுக கூட்டணிக்கு அளித்த மகத்தான ஆதரவுக்கும், ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவிக்கும் பயணத்தை சிறப்பித்தனர்.